January 5, 2009

குழந்தையெனும் வரமே!



விழிநிறைந்த வியப்பே!--முகை
...விரியுமண மலரே!
மொழிமயங்கும் கவியே!--தவழ்
...முழுமதியின் அழகே!
பொழியுமழைத் துளியே!-- வளர்
...புதியபசும் பயிரே!
குழந்தையெனும் வரமே!--உயிர்
...குளிரவரும் இதமே!

2 comments:

  1. அருமை அம்மா,
    இது நாம் ஆரம்பிக்க முயன்றதா?
    திப்பிலி

    ReplyDelete
  2. //அருமை அம்மா,
    இது நாம் ஆரம்பிக்க முயன்றதா?
    திப்பிலி//

    ஆமாம்.
    லக்ஷ்மியின் குழந்தையை போட்டோவில் பார்த்ததும்,
    எழுதத் தோன்றியது!வெள்ளை விழியே தெரியாத
    அளவுக்கு கருவிழி நெறஞ்சுப் பார்க்கும் பார்வையின்
    அழகு எழுதத் தூண்டியது!
    நாம் எழுத ஆரம்பித்து ஓரளவு எழுதினோம்.
    பின்பு இதை சிந்துப் பாடலாகச் செய்தேன்!

    "விழிநிறைந்த வியப்பே!--முகை
    விரியுமண மலரே!"
    இந்த அடியில் வியப்பே ஒரு கோடு தனிச்சொல்(முகை)
    இரண்டாவது அடியும் முதல் அடியும் சமமாக
    (தனிச்சொல் தவிர்த்து)இருக்க வேண்டும்.
    'இரட்டைசமநிலைச் சிந்து'ஆகும்.(கவிமாமணி.இலந்தை ஐயா சொன்னார்)

    ReplyDelete