February 1, 2010

இறைவனேஅருள்செய்வான்!

குவைநிதிவளர் கவினிளமையும் சுவைதருவதும் எதுவரை?
இவைஅவையென தினம்வருந்திடும் விதம்திரிவதில் பயனிலை!
சிவையவள்பதி சிவகுருதவ நிலைநினைவுகொள்! மயலறும்!
நவையுறுபவ வினையழிவழி வகையருள்செயும் இறைவனே!

3 comments:

  1. மயலறும்= மயல்+அறும்????

    ReplyDelete
  2. //மயலறும்= மயல்+அறும்????//

    மயல்=மயக்கம்
    சிவனை நினைத்தால் இவ்வுலக இன்பமாகிய
    மயக்கம் அழிந்துவிடும் என்ற பொருளில் எழுதினேன்.
    கீதா! நன்றி!

    ReplyDelete
  3. அன்பு கீதா!
    கவிதைப் படிக்கும் உங்கள் ஆர்வத்தைப்
    பாராட்டுகிறேன்.மகிழ்ச்சியாக இருக்கு.
    உங்கள் உடல் நலனைக் கவனித்துக் கொண்டு
    இலக்கியத்தில் வலம் வரவும்!நன்றி!கீதா!

    ReplyDelete