November 4, 2008

"சேலை அவிழ்ந்தது"

வெண்பாவின் முதற்சீர் "சேலை அவிழ்ந்தது"

சேலை அவிழ்ந்தது; சீராகக் கட்டுகின்றாள்
சோலை மலரழகுச் சுந்தரியாள்!--வேலைசெலும்
தாயறியாப் போதிலவள் தானுடுத்த ஆசைகொண்ட
சேயவளும் சின்னப்பெண் தான்.

3 comments:

  1. இது உங்கள் பார்வைக்கு மட்டும்; வெளியிடுவதற்கு அன்று.

    //...ஆசைகொண்டச் சேயவளும்.../

    வலிமிகாது.

    `ஆசைகொண்ட சேயவளும்' என வரவேண்டும்.

    நன்கு பாடல் இயற்றுகிறீர்கள். பாராட்டுகள்.

    ReplyDelete
  2. அ.நம்பி அவர்களுக்கு,பிழையை சரிசெய்து
    இடுகிறேன்.சுட்டியமைக்கு மிகவும் நன்றி!
    பாராட்டுக்கும் நன்றி!.

    அன்புடன்,
    தங்கமணி.

    ReplyDelete
  3. பார்க்க: என் மின்மடல்

    ReplyDelete