October 16, 2008

ஊட்டி மலையில்...

ஊட்டி மலையில் விரைவுவண்டி
...ஊர்ந்து வளைவில் தொடர்கிறது!
வாட்டும் குளிரில் மழலையுடன்
...மங்கை ஒருத்தித் தவிப்பினிலே!
சாட்டும் வறுமை தெரிகிறது!
...சால்வை கொடுத்துக் குளிர்குறைத்தேன்
காட்டும் விழிநீர் அவள்நிலையை;
...கரங்கள் குவித்தாள்! இறைநினைந்தேன்!

2 comments:

  1. swஏழைப் பெண்ணுக்குத் தன் மேலாடையை ஆற்றில் விட்ட காந்தியின் கருணைக்கு
    சற்றும் குறைந்ததல்ல உன் செயல்.
    கொடியில் காய்ந்து கொண்டிருந்த புடவையை உருவி ஏழைக்குக் கொடுத்த
    ராஜம்மாவின் பெண்ணல்லவா விசாலாக்ஷி[பரந்த நோக்கமுடையவள்]

    ReplyDelete
  2. அனானிமஸ்!,
    தங்கமணியின் இன்னொரு பெயர்
    விசாலாட்சி என்பதை சொல்லிவிட்டாய்!
    நான் ஒன்றுக்கும் ஆகாதத் தூசு,
    ஆனாலும்,இறைவனை,பெரியோரை,இயற்கையை
    நினைக்கும் மனம் வேண்டி வாழ்கின்றேன்!
    மஹான் காந்திக்கு நிகர் அவரே!!!
    எப்பேர்ப்பட்ட தியாகி அவர்!அவர் பெயரைச் சொன்னாலே
    புண்ணியம்!

    அன்புடன்,
    தங்கமணி.

    ReplyDelete