June 22, 2009

உனையே கும்பிடுவேன்!

தண்ணார் பொழிலே! தண்தடமே!
...தவமாய் அருளும் சிற்பரனே!
பண்ணார் இசையில் நெஞ்சினிக்கப்
...பரவும் அடியார் தம்மிறையே!
கண்ணே! மணியே! கண்நுதலே!
...கனியே! சுவையே! தெய்வதமே!
விண்ணோர் அமிழ்தே! கற்பகமே!
...விகிர்தா! உனையே கும்பிடுவேன்!

2 comments:

  1. வணக்கம்.
    தங்களது பாடல் தமிழகத்தில் மிகப் பிரபலமான காவடிச்சிந்து
    எனும் மெட்டில் பொருத்தமாகவே அமைகிறது.

    பாட்டுடைத் தலைவனாம் இறைதனை உருவாகவும் அருவாகவும்
    அடியார்தம் நெஞ்சினிக்க அமரும் இறையாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள்.
    சிற்பரனே என்பது சிற்சபேசனோ ? பதில் ஒரு சொல் நவின்றால்
    உதவியாக இருக்கும், இறை சார் படங்களுடன் பாடலைப் பதிப்பதற்கு.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  2. திரு.சூரி அவர்களுக்கு.
    சிற்பரனே என்று எழுதியிருக்கிறேன்.
    உங்கள் ஆர்வத்திற்குஎன் நன்றி!

    அன்புடன்,
    தங்கமணி.

    ReplyDelete