December 28, 2008

மனதில் நினைவாக

மனதில் நினைவாகப் பதிந்த
..வழிச்சுவடு மங்கி மறைந்திடுமா?
கனவில் நிஜம்காணும் மயக்கம்
..கரைந்துவிடும் மணலில் அலையாக
நினைவில் சிறுவயதின் நிகழ்வை
..நிழலெனவேத் தோன்றும் கதையாக
புனைந்து அனுபவமாய் உணர்த்தும்
..புதுமையினை கூறும் திரைப்படமே!

2 comments:

  1. நினைவு, நிஜம், நிழல் - இவற்றின் கூட்டணி கவிஞர்களுக்கு மிகவும் பிடித்தது போலும்!
    :-)

    ReplyDelete
  2. //நினைவு, நிஜம், நிழல் - இவற்றின் கூட்டணி கவிஞர்களுக்கு
    மிகவும் பிடித்தது போலும்!//

    நினைவு நிழலாகி நிஜம்காண்பது,
    ஞானிகளுக்கும்,
    விஞ்ஞானிகளுக்கும் பொருந்துமன்றோ?

    அன்புடன்,
    தங்கமணி.

    ReplyDelete