December 26, 2008

"என்னால் முடிந்த திது"

வெண்பாவின் ஈற்றடி "என்னால் முடிந்த திது"

பொன்னான எண்ணங்கள் பூக்கின்ற உள்ளமிதில்
தன்னாலே மேன்மை தழைத்திடும்!-- பன்னாளும்
தொன்னூல் பலகற்கத் துய்யறிவு வேண்டுவேன்
என்னால் முடிந்த(து) இது.

4 comments:

  1. பொன்னான நேரத்தில்
    பொங்கிவரும் பாட்டெழுதி
    என்போன்ற நேயர்தம்
    ஏற்புடைய வாழ்த்துகளை
    வென்றதனால் உங்களுக்கு
    வேறென்ன நன்றிசொன்னேன்
    என்னால் முடிந்த திது...

    ReplyDelete
  2. அன்பு ஊற்று!
    கவிதை ஊற்றாய் அழகுத் தமிழில்,
    கருத்தும்,பாராட்டும் தந்தமைக்கு
    என் பணிவான நன்றி!

    அன்புடன்,
    தங்கமணி.

    ReplyDelete
  3. வெண்பாவை என்பாவை வேண்டுகிற உள்ளங்கள்
    நன்றாக உள்ளதென்றே நவின்றிட இன்னுமின்னும்
    கன்னல் தமிழால் கவிதைகள் பாடுவேன்
    என்னால் முடிந்த திது!

    ReplyDelete
  4. அன்புள்ள இப்னு ஹம்துன்!
    கன்னல் தமிழில்,எளிதாய் இலகுவாய்,
    வெண்பாவை அளித்த கவி இப்னு ஹம்துன்னுக்கு
    என் பாராட்டுகளும்,வாழ்த்துகளும்!

    அன்புடன்,
    தங்கமணி.

    ReplyDelete