மலர்கள்!
=======
தென்றலினில் அசைந்தாடும் தேமதுரப் பூஞ்சிரிப்பில்
...செம்மலரும் மழலையுந்தான் ஓரினமே!
மின்னொளிரும் பொன்பூக்கும் மென்மையினில் மிஞ்சுகின்ற
...வண்ணமலர் மணம்கூடும் கோலமென்ன!
தன்னிகரில் இயற்கைத்தாய் தவமாகப் பெற்றனளோ?
...சந்ததமும் இறையழகை நினைவூட்டும்!
என்னவிதம் புகழ்வமிந்த எழில்மலர்கள் கொள்ளைதனை
...இங்கிதமாய்க் கொய்யாமல் தரிசிப்போம்1
"...இங்கிதமாய்க் கொய்யாமல் தரிசிப்போம்1 "
ReplyDeleteஅம்மா..
எங்கிருந்து தான் வார்த்தை மலர்களை இப்படி அழகாக கோர்க்கிறீர்கள்?????
அருமை.. அருமையிலும் அருமை..