August 7, 2008

ஊனாகி உயிராய்..!


ஊனாகி உயிராய் ஊணாய் உணர்வாய் உருவாய் உதிக்கும் ஒண்பொருளே!
கானாகித் தருவாய் கனியாய் மலையாய் கதிராய் விளங்கும் கண்மணியே!
தேனாகிப் பாகாய் தெவிட்டாக் கன்னல் சாறாய் இனிக்கும் தெள்ளமுதே!
வானாகி வெளியாய் வளியாய் விரிவாய்க் கருணை தழைக்க வந்தருள்வாய்!

2 comments:

  1. கொஞ்சும் தமிழில் கொடுக்கின்றீர் பாக்களை
    நெஞ்சில் நிறுத்தி நெகிழ்கின்றேன்! -மஞ்சின்
    பொழிவோ இதுவென்றுப் புல்லரிக்கும் வன்னம்
    எழிலோ டிழைத்த இது!

    அகரம்.அமுதா

    ReplyDelete
  2. அன்புள்ள அமுதன்!
    உன் பாராட்டுடன்,அருமையான வெண்பா கிடைத்தது!
    ஆசிகள்!வாழ்த்துகள்!!

    அன்புடன்,
    தங்கமணி.

    ReplyDelete