April 10, 2009

அண்ணா மலையாம் அருணசிவம்!


எண்ணா திருப்பினும் இன்னருள் செய்திடும்
அண்ணா மலையாம் அருணசிவம்!-- விண்ணாய்
விரிந்துயர் கோபுரம் விந்தைமிகக் கண்ணால்
தெரிந்திடக் காட்டும் சிவம்.

8 comments:

  1. எண்ணா திருப்பினும் இன்னருள் புரிந்திடும்.....என்ற வரி நன்றாக இருக்கிற்து
    உமா.

    ReplyDelete
  2. //எண்ணா திருப்பினும் இன்னருள் செய்திடும் //

    இன்னருள் செய்யும் அண்ணாமலையாரைக் காணும் நாளை எதிர்பார்க்கின்றேன். என்னிக்குக் கிடைக்குமோ? :(((
    அருமையான கவிதைக்கு நன்றி அம்மா.

    ReplyDelete
  3. அன்புள்ள ஞானசேகரன்!
    மிக்க நன்றி!

    அன்புடன்,
    தங்கமணி.

    ReplyDelete
  4. //எண்ணா திருப்பினும் இன்னருள் புரிந்திடும்
    என்ற வரி நன்றாக இருக்கிற்து//

    மிக்க நன்றி!அன்பு உமா!

    அன்புடன்,
    தங்கமணி.

    ReplyDelete
  5. அன்புள்ள கீதாசாம்பசிவம்!
    நீங்கள் இன்னும் திருவண்ணாமலை
    சென்றதில்லையா?
    திருவண்ணாமலையாரை
    சென்று தரிசித்து வரலாமே!
    கவிதைப் பற்றிய உங்கள் கருத்துக்கு நன்றி!

    அன்புடன்,
    தங்கமணி.

    ReplyDelete
  6. அன்புள்ள அம்மா..
    மிக அருமையான வரிகள்..
    akilacsr

    ReplyDelete
  7. //அன்புள்ள அம்மா..
    மிக அருமையான வரிகள்..//

    மிக்கநன்றி!அகிலா!நீ பதிந்த படம்
    மிக அழகு!பெரியவாளுடன் அன்னை காமாட்சி!
    அதற்கு ஒரு ஸ்பெஷல் நன்றி ம்மா!

    அன்புடன்,
    தங்கமணி.

    ReplyDelete