February 6, 2009

வெண்ணிலவே!



(அரையடி-- மா காய் காய்)

> வெள்ளித் தகடெனவே விண்வெளியில்
> ...மிளிரும் வடிவழகே! வெண்ணிலவே!
> கொள்ளை இளமையுடன் கூடிடுவாய்!
> ...கோடி யுகங்களிலும் தோன்றிடுவாய்!
> துள்ளும் சிறுவயதில் சொந்தமடி!
> ...துணையாய் முதுமையிலும் வந்திடுவாய்!
> உள்ளம் களித்திருப்பேன் நீவருவாய்!
> ...உருவில் குறைந்துவளர் வெண்ணிலவே!

> அன்புடன்,
> தங்கமணி.

3 comments:

  1. துணையாய் முதுமையிலும் வந்திடுவாய்.....
    ரொம்ப உண்மை...
    தாரமங்கலத்தில் தூக்கம் வராமல் தொட்டிமுற்றத்தில் பார்த்த அதே நிலவை
    சியாட்டலிலும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
    உமா.

    ReplyDelete
  2. Thanks for your appreciation.

    anbudan,
    thangamaNi.

    ReplyDelete